என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் மகேஸ்வரி"
திருவள்ளூர், மார்ச். 22-
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டரு மான மகேஸ்வரி ரவிக் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் திரு வள்ளூர் சட்டசபை தொகுதி களுக்கு, முகேஷ் கட்டாரியா (மொபைல் எண்: 89252 40311)
பூந்தமல்லி, ஆவடி மற்றும் மாதவரம் சட்டசபை தொகுதிகளுக்கு பிரவீன் குமார் (மொபைல் எண். 89252 40310) ஆகியோர் செலவின மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வேட்பா ளர்களின் செலவு விபரங் களை, தேர்தல் செலவின பார்வையாளர்களின் மொபைல் போன் எண் களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக இதுவரை ரூ. 1.05 கோடி பறிமுதல் செய் யப்பட்டு உள்ளது. இதில், உரிய ஆவணம் காட்டிய தால், ரூ. 1.13 லட்சம் ரூபாய் விடு விக்கப்பட்டது.
மீதம் உள்ள ரூ. 1.04 கோடி பூந்தமல்லி அரசு கருவூ லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 10 லட் சம் மதிப்புள்ள குட்கா கைப் பற்றப்பட்டு, கவரைப் பேட்டை போலீஸ் நிலையத் தில் உள்ளது.
ஓட்டுப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அடையாள அட்டையை காண்பித்து ஓட்டு அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி. ஏரிக்கு கடந்த 29-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 706 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடும் மதகுகளை பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் வந்து சேரும் பகுதிக்கு சென்றார்.
அப்போது கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயின்டிலிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் பொது மக்கள் யாரும் குளிக்காமலும், துணி துவைக்காமலும் தடுக்க அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
மேலும் கால்வாய் நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி கால்வாயில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.
பின்னர் அவர் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாய், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார்.
அப்போது அவருடன் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் உடன் இருந்தனர். #tamilnews
கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருவள்ளூர் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து இன்று காலை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
வடக்கு ராஜவீதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கலெக்டர் மகேஸ்வரி அதிரடியாக சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் பைகளின் தரத்தை பரிசோதித்தார். அவை தடை செய்யப்பட்டவை என்று தெரிந்தது. அந்த கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பஜார் வீதி, ராஜாஜி சாலை, சி.வி.நாயுடு சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடந்தது.
இதனால் திருவள்ளூர் நகர பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த ஆய்வின் போது இணை இயக்குனர் தயாளன், சார்ஆட்சியர் ரத்னா, வட்டாட்சியர் தமிழ் செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர் கவின்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூரில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக் டர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 6 மாதத்துக்கு ஒருமுறை கோமாரி நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமைகளுக்கான தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இதுவரை 14 சுற்று முகாம்கள் முடிந்து தற்போது 15வது சுற்று முகாம் 1-ந் தேதி தொடங்கியது. இது 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 84 கால்நடை மருந்தகங்கள், 29 கால்நடை கிளை நிலையங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
முகாம்களுக்காக கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினரால் 2 லட்சத்து 80 ஆயிரத்து 350 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி போடப்பட உள்ளது. கோமாரி நோய் தடுப்பபூசி முகாம் குறித்து ஏற்கனவே நடைபெற்ற கிராம சபா கூட்டங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் கூறினார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்